மருமகன் கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுக்கு பின் மாமியார் கைது

ஆவடி, ஜன. 21: சென்னை,  திருவல்லிக்கேணி, அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26), பெயின்டர். இவரது சொந்த ஊர் மதுரை. இவர், மீது சென்னை மற்றும் மதுரையில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2019 அக்டோபர் 10ம் தேதி ஆவடி அடுத்த காட்டூர், அந்தோணி நகரில் உள்ள காலி மைதானத்தில் பிரகாஷை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக மாதவரம், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த  கார்த்திக் (26) மற்றும் அவரது கூட்டாளிகள் பெரம்பூர், சத்தியபாமா தெருவை சேர்ந்த அரவிந்த்  (18), குமார் (30) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப பிரச்னை காரணமாக பிரகாசை, அவரது சகலை கார்த்திக் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய, பிரகாஷின் மாமியார் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகுந்தலா (45) தலைமறைவாக இருந்தார். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் சகுந்தலாவை போலீசார்  கைது செய்தனர். பிறகு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>