×

எலச்சிபாளையத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, ஜன.21: திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் குழந்தைகள் நல வட்டார அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியருக்கு ₹10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கண்ணகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட இணை செயலாளர் கலா, அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணியம், சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மணிமேகலை கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை