×

ஓபிஎஸ் 2 நாளில் நல்ல முடிவு தவெக – அமமுக பேச்சுவார்த்தை? செங்கோட்டையன் பேட்டி

கோவை: தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒபிஎஸ்-ஐ பொறுத்தவரை நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அவர்களது கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் 2 நாளில் நல்ல முடிவு எடுக்க இருக்கிறார்கள். எந்த காலத்திலும் எடப்பாடி தலைமையில் இருக்கிற அதிமுகவில் தன்னை இணைத்து கொள்ளப்போவதில்லை. துரோகத்துக்கு இடமளிக்க மாட்டேன் என உறுதி அளித்து இருக்கிறார். எனவே விரைவில் நல்ல முடிவை எடுப்பார். காங்கிரஸ் – தவெக இணைவது குறித்த கருத்துகள் இப்போது இல்லை. டிடிவி தினகரன், ஒபிஎஸ் உட்பட ஒவ்வொருவரும், ஒவ்வொருவரோடு கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருப்பது உண்மை. முடிவுகளை எப்போது எடுப்பார்கள் என்று தெரியவில்லை. அதேபோல அதிமுகவில் இருந்து விலகி சிலர் தவெகவில் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : OPS ,Sengkottaian ,KOWAI ,DAVEKA ,GOVERNING BODY ,SENKOTAYAN ,GOWA AIRPORT ,
× RELATED சொல்லிட்டாங்க…