×

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பறவைகளை பாதுகாக்க வனத்துறையினர் ரோந்து

அதிராம்பட்டினம்,ஜன.21: அதிராம்பட்டினம் அலையாத்தி காடு பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால் பறவைகளை பாதுகாக்க வனத்துறையினர் கடல் மார்க்கம் வழியாக வேட்டை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அலையாத்தி காட்டுக்கு ஆண்டு தோறும் மலேசியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் இருபதுக்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து கூழைக்கடா, செங்கால் நாரை, பூநாரை, பவளக்கால், உள்ளான், மயில் கால் கோழி, பாம்புதாரா, நத்தை கொத்தி நாரை, கொக்கு என பலவகையான நீர்ப்பறவைகள் காட்டிற்கு வருவது வழக்கம். தற்போது வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கி உள்ளது. அதோடு இமயமலைப்பகுதியில் இருந்து பறவைகள் வந்துள்ளது. இதனை பாதுகாக்க தஞ்சை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி ஆகியோர் உத்தரவின் பேரில் கடல் மார்க்கம் வழியாக பறவைகளை வேட்டையாடுவதை தடுக்க முத்துப்பேட்டை வனசரக அலுவலர் தாஹிர் அலி தலைமையில் வன காப்பாளர்கள் சிவனேசன், ஷகிலா, கணேசன், பாலசுப்பிரமணியன் மற்றும் காப்பாளர்கள் குழு படகு மூலம் அதிராம்பட்டினம் மறவக்காடு முத்துப்பேட்டை லகூன் வரை கடல் மார்க்கம் வழியாக வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Foresters ,seas ,Adirampattinam ,
× RELATED குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம்