- பாரதியார் பல்கலைக்கழகம்
- ஆளுகைத்தல்
- சபை
- கோயம்புத்தூர்
- 89வது நிர்வாகக் குழு கூட்டம்
- 87வது நிர்வாகக் குழு
- ஆட்சி மன்றம்
கோவை, டிச. 24: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 89-வது ஆட்சிப்ேபரவை கூட்டம் வரும் 29-ம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்துடன் ஒத்திவைக்கப்பட்ட 87-வது ஆட்சிப்பேரவை கூட்டம் சேர்த்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்சிப்பேரவை கூட்டத்திற்கு உறுப்பினர்களிடம் இருந்து தீர்மானம் மற்றும் வினாக்கள் பெறப்பட்டது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக வரும் 29-ம் தேதி நடக்க இருந்த ஆட்சிப்பேரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், கூட்டம் நடக்கும் தேதி குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
