×

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, ஜன. 21: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பொன்னமராவதியில் விவசாயிகள் சங்கம் சார்பி–்ல் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொன்னமராவதி பகுதியில் தொடர் மழையால் நீரில் மூழ்கி பாதித்த பயிர்களை பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கக்கோரி பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதி பகுதியில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ள பயிர்களை பார்வையிட்டு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். நாசகர வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் துணை தாசில்தார் பிரகாஷிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார், மாயாழகு, சிஐடியூ பாஸ்கர், அப்பாஸ், சவுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : union ,
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...