- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- தஞ்சாவூர்
- அமைச்சர்
- சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
- எஸ்எம்எம்இ
- தஞ்சாவூர் மாவட்டம்
- தமிழ்நாடு நகர வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம்
- மொ. அன்பராசன்
- உயர் கல்வித் துறை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் முன்னிலையில் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்,, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் அவர்கள் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் அவர்கள் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை அவர்கள் (பட்டுக்கோட்டை), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் அவர்கள், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அய்யனார் கோவில் பகுதி II திட்டப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த குடியிருப்பில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
நீர்நிலைகளில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பங்களிப்புத் தொகை ரூ. 9 கோடியே 69 லட்சம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சி வழங்க உள்ளது.
இந்த குடியிருப்பில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7.44 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம், 1 லட்சம் கொள்ளளவு கொண்ட 4 கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் , 6 லட்சம் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, மில்க் பூத், நூலகம், சமுதாய நலக்கூடம், துணை சுகாதார மையம், பூங்கா, வாகனம் நிறுத்தும் இடம் போன்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்து தரப்பட்டுள்ளது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் இந்தியாவிலேயே முதன் முதலாக 1970-ஆம் ஆண்டு ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்க கொண்டு வரப்பட்ட அற்புத திட்டங்களில் ஒன்று தான் “தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்”. இந்த வாரியத்தால் இதுவரை 489 திட்டப் பகுதிகளில் 2 லட்சத்து 33 ஆயிரம் 782
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 46 ஆயிரத்து 66 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு, 83 ஆயிரத்து 499 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 63 ஆயிரத்து 359 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 ஆயிரத்து 210 குடியிருப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கடந்த 4 ½ ஆண்டுகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 46 கோடியே 27 லட்சம் மதிப்பில் 504 குடியிருப்புகளும், திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 10 கோடியே 53 லட்சம் மதிப்பில் 80 குடியிருப்புகளும், கட்டி முடிக்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 139 கோடியே 46 லட்சம் மதிப்பில் 936 குடியிருப்புகள் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. 2014 – 2021 வரை 6 ஆண்டு காலத்தில் ரூ.2 ஆயிரத்து 438 கோடி மதிப்பில் 27 ஆயிரத்து 668 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டது.
கடந்த 4 ½ ஆண்டுகளில் ரூ.6 ஆயிரத்து 363 கோடியே 19 லட்சம் மதிப்பில், 55 ஆயிரத்து 831 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள 83 ஆயிரத்து 499 அடுக்குமாடி குடியிருப்புகளில், கடந்த ஆட்சியில், 6 ஆயிரத்து 417 குடியிருப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது 4 ½ ஆண்டுகளில் 68 ஆயிரத்து 152 அடுக்குமாடி குடியிருப்புகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 10 ஆயிரத்து 574 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த ஆட்சி காலத்தில் 1 இலட்சத்து 40 ஆயிரத்து 250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது 2 இலட்சத்து 7 ஆயிரத்து 605 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 55 ஆயிரத்து 99 தனி வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மாவட்டத்தில் 1142 வீடுகளும், திருவாரூர் மாவட்டத்தில் 245 வீடுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 189 வீடுகள் என மொத்தம் 1,576 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கு மானியமாக ரூ.38 கோடியே 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை ஒன்றிய அரசு ஒரு வீட்டிற்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், மாநில அரசு ரூ. 60 ஆயிரமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டது.
2025-2026 முதல், மாநில அரசின் மானியத்தை ரூ. 60 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தி, ஒரு வீட்டிற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமாக வழங்கப்பட உள்ளது. வீடுகளை காலி செய்யும் குடியிருப்புதார்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ. 24 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 3 ஆயிரத்து 500 கோடி மதிப்பில், 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2030 – க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடிசை இல்லாத் தமிழ்நாடு உருவாக்கப்படும். முதல்வர் அவர்கள் கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றி வருகிறார்.
அதுபோன்று, குடிசைகளே இல்லாத தமிழ்நாடு, அனைவருக்கும் வீட்டு வசதி என்ற உன்னத நோக்கத்தோடு திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அய்யனார் கோவில் பகுதி II திட்டப் பகுதியில் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகளை வழங்கினார்கள்.
