×

புரோட்டின் இட்லி

தேவையான பொருட்கள்

முளைகட்டிய பாசிபயறு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
பாதம் – 10
கருப்பு கொண்டைக் கடலை – 1 கப்
மக்கானா – 1/2 கப்
அவல் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

உளுத்தம் பருப்பு, கருப்பு கொண்டைக் கடலை, மக்கானா, பாதம் மற்றும் அவல் ஆகியவற்றை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் முளைகட்டிய பாசிபயறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும். உப்பு சேர்த்து கரைத்து ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். காலையில் இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். சத்தான சுவையான புரோட்டின் இட்லி தயார்.

 

Tags : MACANA ,
× RELATED கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சிக்கன் ஹெர்பல் கலோசல் கேக்