155 பேர் கைது திருநள்ளாறில் 2 பேருக்கு கொரோனா

காரைக்கால், ஜன. 21: திருநள்ளாறில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 67,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்தபோது திருநள்ளாரை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை 3,854 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,763 பேர் குணமடைந்தனர். 26 பேர் வீட்டு தனிமையிலும், சிகிச்சையிலும் இருந்து வருகின்றனர். இதுவரை காரைக்காலில் 69 பேர் கொரோனா தொற்று பாதித்து இறந்துள்ளனர் என்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நலவழித்துறை (நோய் தடுப்பு) துணை இயக்குனர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>