×

ஒடிசாவில் டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண் : ஆயுதங்கள் ஒப்படைப்பு!

புபனேஸ்வர்: ஒடிசாவில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 22 நக்சல்கள், டிஜிபி முன்னிலையில் இன்று சரணடைந்தனர். மேலும், அவர்கள் தங்களது ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல் அற்ற இடமாக மால்காங்கிரியை மாற்ற பாதுகாப்புப் படையினர் இலக்கு வைத்துள்ள நிலையில், இன்று 22 நக்சல்கள் சரண் அடைந்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சலைட்டுகள் டிஜிபி, ஒய்.பி. குரானியா முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13 ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சரணடைந்தவர்களில் ஒரு டிவிஷனல் கமிட்டி உறுப்பினர், மற்றும் 6 ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் அடங்குவர். சரண் அடைந்தவர்கள் அனைவர் மீதும் ரூ.2 கோடிக்கும் அதிகமான சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளில் சிலர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஒடிசாவின் வனப் பகுதிகளில் இயங்கி வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா அரசின் நக்சல் சரணடைதல் மற்றும் புனர்வாழ்வு கொள்கையின் கீழ், இவர்கள் ஒவ்வொருவருக்கும் முதற்கட்டமாக ரூ.25,000 நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு வீடு, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் இதர அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது.

Tags : DGP ,Bhubaneswar ,Naxals ,Maoist ,Odisha ,Malkangiri ,Naxal ,
× RELATED ஒன்றிய அரசின் ‘சிறந்த பொதுப்...