மக்கள் கோரிக்கை செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படுமா? ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஜன. 21: கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே உள்ள பூங்கா சீரமைக்கப்பட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், தடுப்பணை அருகே பூங்கா வளாகம் உருவாக்கப்பட்டும் சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தது. தற்போது பூங்கா பகுதிக்கு அதிகளவு மக்கள் செல்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக பூங்கா வளாகத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் பழுதுடைந்தும், செடிகொடிகள் வளர்ந்தும் மோசமான நிலையில் உள்ளது. தற்போதைய நிலையில் அமராவதி ஆற்றில் செட்டிபாளையம் தடுப்பணை வழியாக தண்ணீர் சென்று கொண்டுள்ளது. அவ்வப்போது பொதுமக்களும் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். எனவே, இந்த பூங்காவை சீரமைத்து எப்போதும் மக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>