புதுடெல்லி: பாஜ தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தளத்தில், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் குறித்த சோனியா காந்தியின் சமீபத்திய கட்டுரை, ஒரு அரசியல் கற்பனையை போல் உள்ளது. அவர் விபி ஜி ராம் ஜி திட்டத்தை படிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் அவரது வாதங்கள் தவறான சித்தரிப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்டவை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
