- திருப்பூர் அரசு
- மருத்துவமனை
- திருப்பூர்
- எம்ஆர்பி
- திருப்பூர் அரசு மருத்துவமனை
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனை…
திருப்பூர், டிச.22:திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் முதல் எம்.ஆர்.பி. செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். தேர்தல் வாக்குறுதிப்படி எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.புதிதாக துவங்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் போராட்டம் தொடங்கிய நிலையில் விடிய விடிய தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போரடடம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
