தென் ஆப்ரிக்கா: தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு; 10 பேர் படுகாயம் அடைந்தனர். ஜோகன்னஸ்பர்க் அருகே பெக்கர்ஸ்டால் நகரில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சாலையில் நடந்து சென்ற அப்பாவி மக்கள் சிலரும் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
