×

ஓடிபி இல்லாமல் ஹேக்கிங் வாட்ஸ் அப்பில் புது மோசடி: சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

புதுடெல்லி: ஓடிபி இல்லாமல் வாட்ஸ் அப் கணக்குகளில் ஊடுருவி தரவுகளை திருடும் இணைய வழி மோசடி நடப்பதாக இந்திய சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. வாட்ஸ் அப்பில் கண்டறியப்பட்டுள்ள கோஸ்ட் பெயரிங் எனும் தாக்குதல், சாதாரண ஆன்லைன் மோசடிகளை விட மிகவும் ஆபத்தானது. வழக்கமாக ஹேக்கர்கள் உங்கள் கணக்கைத் திருட ஓடிபியை உங்களிடமிருந்து தந்திரமாகக் கேட்பார்கள். ஆனால், இந்த முறையில் உங்கள் செல்் போன் உங்கள் கையிலேயே இருக்கும்போதே, உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் முழு உரிமையையும் ஹேக்கர்கள் தங்கள் வசம் கொண்டு செல்கின்றனர்.

வாட்ஸ்அப்பை எளிதாகப் பயன்படுத்த அறிமுகப்படுத்திய ‘லிங்க்டு டிவைஸ்’எனும் வசதியையே, ஹேக்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பயனர்களை ஏமாற்றுகின்றனர். உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து, ஒரு போலி லிங்க் வரலாம். அந்த லிங்கைக் கிளிக் செய்தவுடன், அது உங்களை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அடுத்த நொடியே, உங்கள் வாட்ஸ்அப்பின் நகல் ஹேக்கரின் கணினியில் முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிடும். எனவே, தெரிந்த தொடர்புகளிலிருந்து வந்தாலும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்யாமல் இருப்பதள் மூலம் மோசடிகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : WhatsApp ,New Delhi ,Indian Cybersecurity Agency ,
× RELATED சபரிமலையில் இன்று மண்டல பூஜை கோலாகலம்