×

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் மோதியதில் 35 பேர் படுகாயம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்பி பேருந்து விக்கிரவாண்டி அருகே ஆற்றுப்பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் இரு சாலைகளுக்கு இடையே உள்ள தடுப்பு கட்டையில் மோதி பேருந்து தொங்கிய நிலையில் பயணிகள் மீட்கப்பட்டனர். சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் பாயும் நிலையில் பேருந்து ஆற்றில் விலாமல் இருந்ததால் பெர்ம் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். காயமடைந்த 35 பேரில் 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Tags : Sankaraparani River ,Wickravandi ,VILUPURAM ,OMNI ,WIKRIWANDI ,Chennai ,Madurai ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...