- திலயாடி
- தரங்கம்பாடி
- மயிலாடுதர மாவட்டம்
- ஆளுநர் காண்ட்
- திலத்தி-உராட்சி, மயிலாடுதர மாவட்டம்
- மயிலாடுதுர மவதா ஆத்சிர் காந்த்
- திலையாடி கிராமம்
தரங்கம்பாடி, டிச. 20: மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் காந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மயிலாடுதுறை மாவ ட்ட ஆட்சியர் காந்த் தில்லையாடி கிராமத்தில் பிரதம மந்திரி வீடு வசதி திட்டத்தின்கீழ் ரூ.2லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் கான்கிரீட் வீடு கட்டுமான பணிகளை பார்வையிட்டு பயனாளிகளிடம் திட்டத்தின் பயன்குறித்து கேட்டறிந்தார். மேலும் தில்லையாடியில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை விதைகள் நடும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ் சுளா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

