×

6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

போபால்: மத்திய பிரதேசம், சத்னாவில் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் 12 வயது முதல் 15 வயது உடையவர்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மாவட்ட மருத்துவமனையில் உள்ள பணியாளர்களின் கவனக்குறைவால் மட்டுமே குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் அதிருப்தி தெரிவித்தார். இது குறித்து விசாரிக்க பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் , ரத்த வங்கி பொறுப்பு அதிகாரி டாக்டர் தேவேந்திர படேல், லேப் டெக்னீசியன்களான ராம் பாய் திரிபாதி, நந்த்லால் பாண்டே ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Bhopal ,Sardar Vallabhbhai Patel Hospital ,Satna, Madhya Pradesh ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...