×

ரூ.1000 கோடி சட்ட விரோத சூதாட்ட செயலி வழக்கு; யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி: ஒன் எக்ஸ் பெட் என்ற சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் ரூ.1000 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, திரிணாமுல் கட்சி முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி, நடிகர் சோனு சூட், நடிகை நேஹா சர்மா, நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் தாயார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, மிமி சக்ரவர்த்தி, சோனு சூட், நேஹா சர்மா, ஊர்வசி ரவுட்டேலாவின் தாய் உள்ளிட்டோரின் ரூ.8 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி உள்ளது.

Tags : Yuvraj Singh ,Robin Uthappa ,New Delhi ,
× RELATED 41 பேர் பலியான சம்பவத்தில் விஜய்...