- எரையூர் சர்க்கரை மில்
- பெரம்பலூர்
- மாவட்ட கலெக்டர்
- மிருணாளினி
- பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ.
- பிரபாகரன்
- பெரம்பலூர் சர்க்கரை ஆலை
- மாவட்ட ஆட்சியர் மிருணாளினி
பெரம்பலூர்,டிச.19: பெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலையின் 2025-2026ஆம் ஆண்டுக்கான அரவைப் பணியை மாவட்ட கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 2025-2026ஆம் ஆண்டுக்கான அரவையினை நேற்று மாவட்டக் கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த அரவைப் பருவத்தில் பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு உட்பட்ட கரும்பு கோட்டங்கள் மூலமாக 5,311 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட பரப்பிலிருந்து சுமார் 1.50 லட்சம் கரும்பு அரவை செய்து, சராசரியாக 9.50 சதவீதம் சர்க்கரைக் கட்டுமானம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆலை நவீன மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரவைப்பருவம் சிறப்பாக நடைபெற அனைத்து கரும்பு விவசாயிகள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கரும்பு வெட்டு ஆட்கள் ஆகியோர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தலைமை நிர்வாகியும், மாவட்ட வருவாய் அலுவலருமான பன்னீர் செல்வம், வருவாய் கேட்டாட்சியர் அனிதா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கண்ணன், கரும்பு பெருக்கு அலுவலர் சீதாலட்சுமி, துணை தலைமை பொறியாளர் நாரயணன் மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்புவிவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் மற்றும் கரும்பு வளர்ப்போர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமலிங்கம், திமுக வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன் உள்ளிட்ட அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதி நிதிகள், அனைத்து தொழிற் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
