×

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், இந்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு, அமலாக்கத் துறை விசாரணைக்கு தடைபெற்றுள்ளது.

இந்த வழக்குகளை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை நியாயமாக விசாரிக்காது என்பதால் 41 வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாதிடப்பட்டது. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

Tags : TASMAC ,CBI ,Chennai ,Tamil Nadu ,Anti-Corruption Department ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...