- பாலக்காடு
- கேரள மதுவியல் துறை
- வலியார்
- கோயம்புத்தூர்-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை
- கேரள அரசு
- கோயம்புத்தூர்
- கொட்டாரக்கரை
பாலக்காடு: கோவை- பாலக்காடு தேசிய சாலையில் வாளையார் அருகே நேற்று கேரள கலால்துறை அதிகாரிகள், வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து பாலக்காடு வழியாக கொட்டாரக்கராவிற்கு சென்ற கேரள அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 வாலிபர்களின் பேக்கில் 8.69 கிலோ தங்க நகைகள் இருந்தது. விசாரணையில், மும்பையை சேர்ந்த சங்கீத் அஜெய் (27), கிதேஷ் சிவராம் சேலங்கி (30) என்ற இருவரும் மும்பையிலிருந்து ரயிலில் கோவை வந்து, பஸ்சில் திருச்சூருக்கு செல்வது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், கலால்துறை அதிகாரிகள் வந்து ரூ.8 கோடி மதிப்பிலான 8.69 கிலோ நகைகளை பறிமுதல் செய்து அவர்களை மேல், நடவடிக்கைக்காக சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
