×

கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை

அம்பத்தூர்: கஞ்சா புகைப்பதை தட்டிக் கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 4 பேரை தேடி வருகின்றனர். போரூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(35). திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரபாகரனின் மனைவி கோபித்துக் கொண்டு முகப்பேர் கிழக்கு, வேணுகோபால் சாமி தெருவில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், மனைவியை பார்க்க நேற்று முன்தினம் இரவு வேணுகோபால் தெருவில் உள்ள மாமியார் வீட்டிற்கு பிரபாகரன் சென்றார்.

அப்போது, மாமியார் வீட்டின் அருகே கஞ்சா புகைத்து கொண்டிருந்த சிலரை தட்டிக்கேட்டு விரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் பிரபாகரனை சரமாரியாக தாக்கினர். மேலும், 2 நாட்டு வெடிகுண்டுகளைவீட்டின் மீது வீசிவிட்டு தப்பினர். இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், முகப்பேர் மேற்கு, பஜனை கோயில் தெருவை சேர்ந்த மார்ட்டின்(22), வேணுகோபால் தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் மார்ட்டினை நேற்று கைது செய்தனர். மேலும் சிறுவன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Prabhakaran ,Borur ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது