×

ஒன்றிய அமைச்சர் கட்கரியுடன் பிரியங்கா திடீர் சந்திப்பு: உணவு கொடுத்து உபசரித்தார்

புதுடெல்லி: கேரளா வழியாகச் செல்லும் ஆறு சாலைத் திட்டங்கள் குறித்து வலியுறுத்துவதற்காக வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.

அப்போது ரேபரேலியில் உள்ள சில சாலைகள் குறித்து உங்கள் சகோதரர் ராகுல்காந்தியும் சமீபத்தில் என்னைச் சந்தித்ததாக கட்கரி அவரிடம் தெரிவித்தார். அப்போது,’ அண்ணனின் வேலையைச் செய்துவிட்டு, தங்கையின் வேலையைச் செய்யவில்லை என்றால், நீங்கள் நான் செய்யவில்லை என்று குறை கூறுவீர்கள்’ என்று அவர் கூறினார். இது பிரியங்கா காந்தி மற்றும் அறையில் இருந்த மற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அப்போது கட்கரி சில யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ஒரு சாதம் வகையைத் தயாரித்திருந்தார். எனவே நேற்று அவரது அலுவலகத்திற்கு வந்த அனைவருக்கும் சட்னியுடன் அந்த சாத உருண்டைகள் பரிமாறப்பட்டன. பிரியங்கா காந்தி அவரைச் சந்தித்தபோது, ​​அந்த உணவைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்று கட்கரி வற்புறுத்தினார். பிரியங்கா காந்தியும், அவரது கட்சி சகா தீபேந்தர் சிங் ஹூடாவும் கட்கரியுடன் பேசிக்கொண்டே அந்த சாத உருண்டைகளைச் சுவைத்தனர்.

Tags : Priyanka ,Union Minister ,Katkari ,New Delhi ,Wayanadu Constituency ,Congress ,Kerala ,Priyanka Gandhi ,Minister ,Department of Road Transport ,Nitin Katkari ,
× RELATED நாட்டின் விடுதலைக்காக போராடிய...