×

பொய் சொன்ன நயினார் நாகேந்திரன் தொண்டர்கள் ‘டாடா’

வேலூர்: தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்றிரவு வேலூர் மண்டித்தெருவில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நயினார் நாகேந்திரன் பேச தொடங்கினார். அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த தொண்டர்கள் எழுந்து சென்று விட்டனர். இதனால் நாற்காலிகள் காலியாக கிடந்தன. மேலும், நயினார் நாகேந்திரன் பேசுகையில், பல இடங்களில் தவறான புள்ளி விவரங்களை குறிப்பிட்டார். அவரது பேச்சை கேட்டதும் அங்கு கூட்டத்தில் இருந்த சிலர் யாரோ கொடுத்த தவறான புள்ளி விவரங்களை வைத்து பேசுகிறார் என பேசிக்கொண்டனர்.

Tags : Nainar Nagendran ,Tata ,Vellore ,BJP ,Tamil Nadu ,Manditheru, Vellore ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...