×

முந்திரி கேரட் மசாலா சாதம்

தேவையான பொருட்கள்

1கப் சாதம்
2கப் துருவிய கேரட்
4வற்றல் மிளகாய்
1டீஸ்பூன் கறி மசாலா தூள்
2வெங்காயம்
4வற்றல் மிளகாய்
2டேபிள் ஸ்பூன் முந்திரி
தேவையான அளவுஉப்பு
தாளிக்க:
2டேபிள் ஸ்பூன் நெய்
1/4டீஸ்பூன் கடுகு
1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு
1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
தேவையான அளவுகறிவேப்பிலை
தேவையான அளவுமல்லி இலை

செய்முறை

சாதத்தை உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.கேரட்டை துருவி தயாராக வைத்துக் கொள்ளவும்.தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும். வெங்காயம்,மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்கவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி,கறி மசாலா தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.அதன் பின் துருவிய கேரட் சேர்த்து வதக்கி, மேலும் ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். மூடியை திறந்தால் கேரட் நன்கு வெந்திருக்கும். மேலும் கொஞ்சம் வதக்கவும்.பின் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் முந்திரி கேரட் மசாலா சாதம் தயார்.

 

 

 

Tags :
× RELATED தக்காளி,கேரட் சட்னி