×

தக்காளி,கேரட் சட்னி

தேவையான பொருட்கள்

1கேரட் துருவல்
2தக்காளி
2பச்சை மிளகாய்
2வெங்காயம்
1டீஸ்பூன் சீரகம்
இஞ்சி
தேவையான அளவுஉப்பு
தாளிக்க:
1/4டீஸ்பூன் கடுகு
1/4டீஸ்பூன் உளுந்து
சிறிதளவுகறிவேப்பிலை

செய்முறை

காரட்டை துண்டுகளாக நறுக்கி வைக்கக்கவும்.வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சியை நறுக்கி வைக்கவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி,மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு கலந்து விழுதாக அரைக்கவும்.அரைத்த விழுதை ஒரு பௌலில் சேர்க்கவும். தாளிப்பு கரண்டியில் கடுகு உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான சத்தான,தக்காளி,காரட் சட்னி தயார். தோசை,இட்லி எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Tags :
× RELATED முந்திரி கேரட் மசாலா சாதம்