டெல்லி: தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேர் சபரிமலை செல்கிறார்கள். திண்டுக்கல் – சபரிமலை லோயர் கேம்புக்கு ரயில் தடம் வந்தால் மக்கள் பயன்பெறுவர். திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் அமைக்கப்படுமா? என தேனி தொகுதியின் திமுக எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த உள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
