பீகார்: ஆண்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.10,000ஐ திரும்ப கேட்டு பீகார் அரசு நோட்டீஸ் அனுபப்பட்டது. பீகார் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பு 1.40 கோடி பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.10,000 செலுத்தியதில் புதிய திருப்பம் ஏற்பட்டது. பெண்கள் வங்கிக் கணக்குகள் மட்டுமின்றி ஆண்களுக்கும் முறைகேடாக ரூ.10,000 வழங்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது. தர்பங்கா மாவட்டம் ஜாலே கிராமத்தில் மட்டும் 14 ஆண்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
