×

20 வருட வாடகை பாக்கி பேட்டராய சுவாமி கோயில் கடைகளுக்கு நோட்டீஸ்

தேன்கனிக்கோட்டை, ஜன.19:  தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்டராய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள், மாந்தோப்பு மற்றும் உற்சவ மண்டபங்கள் இருந்தது. கோயில் இடங்களை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.  பஸ் ஸ்டாண்டில் உள்ள உற்சவ மண்டபம் மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மண்டபத்தை சுற்றி 5 கடைகள் கட்டி சிலர் ஓட்டல், பேக்கரி, சிப்ஸ் கடைகள் வைத்துள்ளனர். இந்த கடைகளுக்கான வாடகை பணம் கடந்த 20 வருடங்களாக அறநிலையத்துறைக்கு கட்டாமல் உள்ளனர்.தற்போது இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், 5 கடைகள் முன்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளார். அதில் 2001ம் ஆண்டு முதல் 30.10.2020 வரை ₹5.72 லட்சம் வாடகை பாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். நோட்டீஸ் பெற்று 15 நாட்களுக்குள் தொகையினை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : shops ,Swami Koil ,
× RELATED வேலூர் மாவட்ட எல்லையில் 5 மதுக்கடைக்கு...