×

சென்னை பல்கலையில் யுஜிசி நெட் தேர்வுக்கு ஆன்லைனில் சிறப்பு பயிற்சி

சென்னை: யுஜிசி ‘நெட்’ தேர்வுக்கு ஆன்லைனில் 3 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மையத்தின் இயக்குநர் (பொறுப்பு) சத்தியநாராயண் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிசம்பர் மாதம் நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வுக்கு (தாள்-1) பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மையம் சார்பில் டிச.22 முதல் 24ம் தேதி வரை 3 நாட்கள் ஆன்லைனில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பதிவு கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இதற்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிசம்பர் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chennai University ,UGC NET ,Chennai ,University of Chennai ,UGC ,NET ,Madras University Student Counseling Center ,Satyanarayan ,
× RELATED படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும்...