×

மகேஷ்பாபு ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு, ராஜமௌலி இயக்கத்தில் வாரணாசி படத்தில் நடிப்பதன் மூலம், பான் இந்தியா ஸ்டாராக புது அவதாரம் எடுத்திருப்பதுதான் இப்போது வைரல். மகேஷ்பாபுவின் ஃபிட்னெஸ் சீக்ரெட் குறித்து தெரிந்துகொள்வோம்.

ஒர்க்கவுட் திட்டம்

நான் ஒரு ஃபிட்னெஸ் விரும்பி. எனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாகவும், கவனமாகவும் இருப்பேன். எனவே, உடலமைப்பைப் பராமரிக்க கடுமையான உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்கிறேன். அது கார்டியோ, வலிமை பயிற்சி மற்றும் செயல்பாட்டு பயிற்சி ஆகியவற்றின் கலவையாக இருக்கும். தொடர்ந்து ரசிகர்களின் மனதில் நமக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான உழைப்பை நாம் கொடுத்துதான் ஆக வேண்டும். நடிகன் என்று இல்லை பொதுவாகவே எனக்கு ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். அதனால் எனக்காக நான் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன்.

அந்தவகையில், 30 நிமிட கார்டியோ அமர்வுடன் எனது ஒர்க்அவுட்டைத் தொடங்குகிறேன். இது எனது இதயத் துடிப்பை அதிகரிக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இது தவிர, டிரெட்மில்லில் ஓடுவது அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகளையும் செய்து வருகிறேன். கார்டியோவுக்குப் பிறகு, வலிமை பயிற்சியில் கவனம் செலுத்துவேன். அவை தசையை வளர்க்கவும் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனுடன் குந்துகைகள், டெட்லிஃப்ட்ஸ், பெஞ்ச் பிரஸ் மற்றும் புல்-அப்கள் போன்ற கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன்.

அடுத்ததாக செயல்பாட்டு பயிற்சிகள். இது எனது சுறுசுறுப்பு, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பர்பீஸ், பாக்ஸ் ஜம்ப்ஸ் மற்றும் போர் கயிறுகள் போன்ற பயிற்சிகளையும் செய்கிறேன். இந்தப் பயிற்சிகள் அனைத்தையும் 60-90 நிமிடங்கள் என பிரித்து ஐந்து முறையாக பயிற்சி செய்கிறேன்.நடிகர்கள்தான் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், அனைவருமே தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் ஃபிட்டாக இருந்தாலே அவரது தன்னம்பிக்கை அதிகமாகும்.

உணவுத் திட்டம்

ஃபிட்னெஸில் எவ்வளவு கவனம் செலுத்துகிறேனோ அந்தளவு உணவு முறையையும் பின்பற்றி வருகிறேன். அந்த வகையில் எனது உடலுக்கு ஏற்ற சரியான ஊட்டச்சத்துக்களை வழங்கவும், எனது உடலமைப்பைப் பராமரிக்கவும் கடுமையான உணவுத் திட்டத்தைப் பின்பற்றுகிறேன். அதில், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும்ஆரோக்கியமான கொழுப்புகளை உள்ளடக்கிய சீரான உணவை உண்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

காலை உணவு: முட்டை, ஓட்ஸ், நட்ஸ், மற்றும் பழங்களை உள்ளடக்கிய புரதச்சத்து நிறைந்த காலை உணவு அல்லது ஏதேனும் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த புரொட்டீன் ஷேக்குடன் எனது நாளைத் தொடங்குகிறேன்.

மதிய உணவு: மதிய உணவில் பெரும்பாலும் சிக்கன், மட்டன் அல்லது மீன் ஆகியவற்றை கவுனி அரிசி, குயினோவா, அரிசி அல்லது கோதுமை ஆகியவற்றின் கலவையை எடுத்துக்கொள்வேன்.

இரவு உணவு: இரவு உணவில் முழு கோதுமை அல்லது ப்ரவுன் பிரட், இதனுடன் முட்டை அல்லது சிக்கன் எடுத்துக்கொள்வேன்.

தின்பண்டங்கள்: பொதுவாக தின்பண்டங்களில் பழங்கள் மற்றும் புரோட்டீன் பார்களை சாப்பிடுவேன். அவை, நாள் முழுவதுக்குமான எனது ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இவை அனைத்தும்தான் நான் பின்பற்றும் எனது ஃபிட்னெஸுக்கான ரகசியங்கள்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

Tags : Maheshbabu ,Dr ,Pan ,Rajamouli ,Maheshbaba ,
× RELATED புற்றுநோயற்ற எதிர்காலத்தை உருவாக்குவோம்!