×

உணவு ஒவ்வாமை vs உணவு சகிப்பின்மை!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் உண்ணும் ஏதேனும் ஒரு உணவுப் பொருள் நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை அல்லது நமது உடலால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்னும் நிலையில், உடலில் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். அந்த அறிகுறிகள் அனைத்துமே உடல் அப்பொருளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்று நாம் புரிந்துகொள்வதற்காகத்தான். ஆகையால், அப்பொருளை உண்பதை நிறுத்திவிட வேண்டும். அதையும் மீறி அப்பொருளை சாப்பிடும்போது, சிறு அறிகுறிகள் பெரிய ஆபத்தாகக் கூட மாறலாம்.

இந்த எதிர்ப்பு இரு வழியில் வருகிறது. ஒன்று உணவு ஒவ்வாமை. மற்றொன்று, உணவு சகிப்பின்மை. இந்த இரண்டும் வெவ்வேறு வகையில் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலானோர், இன்றளவும் உணவு ஒவ்வாமையும் உணவும் சகிப்பின்மையும் ஒன்று என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.உணவு ஒவ்வாமை (Food Allergy) என்பது, நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் ஏற்படுத்தப்படும் எதிர்வினைகளும் அதன் அறிகுறிகளும்தான். ஏதேனும் ஒரு உணவுப்பொருள் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கியக் காரணிகளான வெள்ளை அணுக்களால், ஹிஸ்டமைன் என்னும் வேதிப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த ஹிஸ்டமைன், உணவிலிருந்து பெறப்படும் அமினோ அமிலத்திலிருந்து உருவாகிறது. உடலுக்குள் நுழைந்து எதிர் பொருளை வெளியேற்றி அழிக்கும் விதமாக, வெள்ளை அணுக்களையும், புரதங்களையும், அதிகமாகவும் வேகமாகவும் ரத்தக்குழாய்களுக்குள் செலுத்துகிறது. இதன் காரணமாக உடலில் கைகள், முகம், கழுத்து, கால், வயிறு போன்ற இடங்களில் இருக்கும் தோலில் அரிப்பும், தடிப்பும், சிவந்து போகுதலும் ஏற்பட்டு, பிறகு ஒவ்வொரு அறிகுறியாக அதிகரிக்கிறது.

உணவு சகிப்பின்மை (Food Intolerance) என்பது, செரிமான மண்டலத்தால் ஏற்படுத்தப்படும் செரிமானக் கோளாறுகளும் அதன் அறிகுறிகளும்தான். இந்நிலையில், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவதில்லை. என்றாலும், உடனடி சிகிச்சையற்ற தொடர்ச்சியான வயிற்றுப்போக்கும் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள், செயற்கை இனிப்புகள், கொழகொழப்புத் தரும் வேதிப்பொருட்கள், உணவுகளின் ஆயட்காலத்தை நீட்டிக்க சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் போன்றவை இவ்வகையான செரிமானம் தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்திவிடும். உணவு ஒவ்வாமை (Food Allergy) மற்றும் உணவு சகிப்பின்மை (Food Intolerance) என்ற இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: உணவியல் நிபுணர் பா. வண்டார்குழலி

Tags :
× RELATED அறுவைசிகிச்சையிலிருந்து விரைவில் மீள…