கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் உணவு சங்கிலிக்காக தினம்தோறும் ஒவ்வொரு உயிரினமும் தன் இறையை தேடி அலைந்து செல்கிறது. இந்த நிலையில் இன்று ஏரிசாலை பகுதியில் நடைமேடை தெருவிளக்கின் அடியில் ஓடி சென்ற எலியை, காகம் பார்த்து இரைக்காக வேட்டையாடுவதற்கு வந்த நிலையில் மின்விளக்கு கம்பத்தின் அடியில் சென்று ஒளிந்து கொண்டது.
இதில் அங்கும் இங்கும் துள்ளி குதித்த போக்கு காட்டிய எலி சிறிது நேரத்தில் காக்கையிடம் வசமாக சிக்கிக்கொண்டது. பாட்டியின் கதை போல் பாட்டியை ஏமாற்றி வடையை தூக்கி சென்ற காகம் தற்போது எலியை ஏமாற்றி தூக்கிச் சென்றது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
