- கேரளா காங்கிரஸ்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவனந்தபுரம்
- கேரள உயர் நீதிமன்றம்
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- ராகுல் மங்குட்டதில்
- பாலக்காடு தொகுதி
- இளைஞர் காங்கிரஸ்
திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலை வரும் 15ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் மிரட்டி கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் புகார் அளித்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து அறிந்த ராகுல் மாங்கூட்டத்தில் தலைமறைவானார். இந்நிலையில் ராகுல் மாங்கூட்டத்தில் மீது மேலும் ஒரு இளம்பெண் பலாத்கார புகார் அளித்ததை தொடர்ந்து இவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து, அதுவரை ராகுல் மாங்கூட்டத்திலை கைது செய்ய தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
* நடிகைக்கு கொலை மிரட்டல்
காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக முதலில் புகார் கூறிய நடிகை ரினி ஆன் ஜார்ஜின், கொச்சியில் உள்ள வீட்டுக்கு சென்ற 2 பேர் ராகுல் மாங்கூட்டத்திலை தொட்டால் தலையை துண்டித்து கொலை செய்வோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து நடிகை ரினி ஆன் ஜார்ஜின் தந்தை பரவூர் போலீசில் புகார் செய்தார்.
