சென்னை, டிச.6: கோட்டூர்புரம் வரதராஜபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவர் தனது வீட்டின் முதல் தளத்தை ரவி (64) என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு விட்டுள்ளார். ரவி, புத்தகம் பைண்டிங் கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும், ரவி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் உரிமையாளர் பஞ்சாட்சரம் வளர்த்து வரும் நாய், முதியவர் ரவியின் காலை கடித்து குதறியது. இதில் வாலி தாங்க முடியாமல் ரவி அலறினார். சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ஓடி வந்து தனது வளர்ப்பு நாயை மடக்கி பிடித்தார். பின்னர் படுகாயமடைந்த ரவியை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வளர்ப்பு நாயின் உரிமையாளர் பஞ்சாட்சரத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
