×

புளியங்குடி நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் பைப்புகள் அமைப்பு

புளியங்குடி, டிச. 6:புளியங்குடி – டி.என்.புதுக்குடி சிவராமு நாடார் தெரு விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பல வருடங்களாக குடிநீர் இணைப்பு இல்லாமல் இருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி நகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து சுமார் ரூ.60 லட்சம் செலவில் புதிய குடிநீர் இணைப்பிற்காக பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தர பாண்டியன் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். துணைச் சேர்மன் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் நாகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் 31வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரெஜிகலா, பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல்ஹமீது மற்றும் பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Puliyangudi Municipality ,Puliyangudi ,D.N. Puthukudi Sivaramu Nadar Street ,
× RELATED திருச்சி துறையூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்