×

தொட்டியம் மதுர காளியம்மன் கோயிலில் சொக்கப்பனை தீப திருவிழா

 

தொட்டியம், டிச. 6: திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுர காளியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மதுரை காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து சொக்கப்பனை ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரகாளியம்மன் கோயில் நிர்வாகிகள் ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் தொட்டியம் அனலாடீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பௌர்ணமி பூஜை நடந்தது. மேலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அனலாடீஸ்வரர் திரிபுரசுந்தரி தாயாருக்கும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Sokkappanai Deepam festival ,Thottiyam Madura Kaliamman temple ,Thottiyam ,Sokkappanai ,Trichy district ,Karthigai Deepam festival ,Maha Deeparathan ,Madurai Kali Amman ,Karthigai Deepam.… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...