- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செல்வப்பெருந்தகை
- சென்னை
- காங்கிரஸ்
- சமக்ர சிக்ஷா அபியான்
- பி.எம் பள்ளிகள்
- ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு பி.எம். பள்ளிகள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் ஆகியவற்றை திறக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால் தான் சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
கல்வி நிதி மறுக்கப்படுவதால் 43.9 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இவர்களுக்கான செலவை தமிழ்நாடு அரசு பட்ஜெட் மூலம் ஈடுகட்டுகிறது. இது மாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்னையாகும். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசு அணுகுவது பாஜவின் எதேச்சதிகார போக்கையே காட்டுகிறது.
