×

மின்வாரிய ஓய்வூதியர்கள் போராட்ட ஆயத்த கூட்டம்

தர்மபுரி, டிச.5: தர்மபுரியில், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், போராட்ட ஆயத்த கூட்டம் மாவட்ட தலைவர் சுந்தரமூர்ததி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயன், மாவட்ட பொருளாளர் சின்னசாமி, துணை செயலாளர் துரைசாமி, துணைத்தலைவர்கள் குப்புசாமி, சுப்பிரமணியம், இணை செயலாளர் ரகுபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில், ஊதிய உயர்வு, பணி பங்கீடு பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். 42 ஆயிரம் ஆரம்ப நிலை பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களையும், ஐடிஐ படித்தவர்களையும் விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் 5 ஆயிரம் பேரையும், 9,613 கேங்மேன்களை கள உதவியாளராக மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Tags : Electricity Board Pensioners ,Preparation ,Dharmapuri ,Electricity Board Pensioners Welfare Organization ,Sundaramurthathi ,District Secretary ,Vijayan ,District Treasurer ,Chinnaswamy ,Deputy Secretary ,Duraiswamy ,Vice Presidents ,Kuppuswamy ,Subramaniam ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்