×

இறச்சகுளத்தில் சேதமடைந்த நடைபாலம் சீரமைக்கப்படுமா?

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளத்தின் ஊர் வழியாக அரசியர் கால்வாய் செல்கிறது. இறச்சகுளத்தின் உள்ள அரசு பள்ளியின் பின்புறம் பாரதிதெரு வழியாக அம்மன்கோயில் தெருவிற்கு செல்லும் வகையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை அரசியர் கால்வாய் குறுக்கே போடப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதிக அளவு சென்று வருகின்றனர்.

ஆட்டோ, பைக் செல்லம் வகையில் உள்ள இந்த நடைபாதை சில நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இடிந்து விழுந்துவிடும் என்ற அச்சஉணர்வோடு அப்பகுதி மக்கள் அந்த நடைபாதையை கடந்து செல்கின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Irachakulam ,Nagercoil ,Rajas Canal ,Ammankoil Street ,Bharathi Theru ,
× RELATED நீதிபதி சுவாமிநாதனை நீக்க கோரி இன்று ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ.