×

பாமக விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: பாமக விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவு எடுக்க முடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது. கடிதங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியாது. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரரின் கருத்தை பெற்று ஆணையம் முடிவு எடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் வரம்புக்குள் வராது என தெரிவித்ததுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Tags : Delhi High Court ,Civil Court ,Bamaka ,Delhi ,Election Commission ,Delhi Icourt ,Electoral Commission ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள...