- காங்கிரஸ்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவனந்தபுரம்
- கேரளா
- முதல் அமைச்சர்
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- பாலக்காடு
- ராகுல் மங்குட்டம்
- வலியமலை
- ராகுல் மங்குட்டம்...
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்து கருச்சிதைவுக்கு கட்டாயப்படுத்தியதாக கூறி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கேரள முதல்வரிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக திருவனந்தபுரம் வலியமலை போலீசார் ராகுல் மாங்கூட்டத்தில் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். கடந்த 7 நாட்களாக அவர் எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்தில் தனக்கு நெருக்கமான ஒரு நடிகையின் சிவப்பு நிற காரில் தப்பிச் சென்றதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள அந்த நடிகையை போலீசார் போனில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ராகுல் மாங்கூட்டத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பது உண்மைதான் என்றும், ஆனால் அவர் தப்பிச்செல்ல தான் உதவவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு மீது திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
