×

ஒரு நம்பர் பிளேட்டுக்கு அதிக தொகை; ரூ.1.17 கோடி ஏலம் எடுத்தவர் பணம் கட்டாமல் தவிர்ப்பு: விசாரணை நடத்த அரியானா அரசு உத்தரவு

சண்டிகர்: அரியானாவில் வாரந்தோறும் விஐபி அல்லது பேன்ஸி எண் வாகன நம்பர் பிளேட் ஆன்லைன் ஏலங்கள் நடத்தப்படுகின்றன. கடந்தவாரம் HR88B8888 என்ற எண் இந்தியாவிலேயே அதிக தொகையான ரூ.1.17 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதை சுதிர்குமார் என்பவர் ஏலம் எடுத்தார். ஒரு வாகன எண்ணுக்கு ரூ.1.17 கோடி ஏலம் எடுத்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் உரிய காலக்கெடுவுக்குள் சுதிர்குமார் பணத்தை கட்டவில்லை. இதனால் அவரது வைப்புத்தொகை ரூ.11 ஆயிரம் பறிபோனது. இதையடுத்து HR88B8888 எண் மீண்டும் ஏலம் விடப்பட உள்ளது. இதையடுத்து அரியானாவில் போக்குவரத்து சேவை ரோமுலஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநராக உள்ள சுதிர் குமாரின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை முழுமையாக விசாரிக்குமாறு அரியானா போக்குவரத்து அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Haryana government ,Chandigarh ,Haryana ,India ,Sudhir Kumar ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...