- தென்னிந்தியர்கள்
- உச்ச நீதிமன்றம்
- நீதிபதி
- பி. வி. நாகரத்னா
- புது தில்லி
- உச்ச நீதிமன்றம் பார் சங்கம்
- தலைமை நீதிபதி
- சூர்யகாந்த்
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி சூர்யாகாந்த்,’ அனைத்து மொழிகளையும் ஊக்குவிக்கவும், இந்தி தேசிய மொழியாகவும் இருப்பதை ஊக்குவிக்கவும் நான் பாடுபடுகிறேன். அதை ஊக்குவிப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று கூறினார். இந்த நிலையில் நீதித்துறையில் இந்தி பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா,’அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பல மொழிகள் உள்ளன.
தென்னிந்தியாவில் இருந்து குறைந்தது ஆறு மொழிகள் அதில் உள்ளன. வெவ்வேறு தென்னிந்திய மாநிலங்களை இணைப்பது ஆங்கிலம். தமிழ்நாட்டிற்குச் சென்றால், யாரும் ஆங்கிலம் அல்லது இந்தி பேசுவதில்லை. நான் எப்படி உரையாடுவது? இந்தியாவை ஒரு துணைக்கண்டமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் இங்கு அரசியல் பற்றிப் பேசவில்லை. மாவட்ட நீதிமன்றங்களில், கன்னடம், தமிழ் போன்ற தனிப்பட்ட மொழிகள் உள்ளன. அரசியலமைப்பு நீதிமன்றங்களில், ஆங்கிலம் அலுவல் மொழியாகும்.
இல்லையெனில், நீதிபதிகளை வெவ்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு எப்படி மாற்றுவது? தயவுசெய்து, இதில் ஒருவித நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். இந்தி தெரியாததால் தென்னிந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட விரும்பாததால் இதைச் சொல்லும்போது நிதானம் தேவை’ என்றார்.
