- பழனி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில்
- கைங்கர்யம்
- திண்டுக்கல் மாவட்டம்
- திமுக அரசு
பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில், கைங்கர்யங்களுக்காக தமிழ்நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், வணிக வளாகங்கள் போன்றவை பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சொத்துகளில் ஏராளமானவை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன்படி கடந்த 2022, மே 9ம் தேதியில் இருந்து நேற்று வரை பழநி கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் திண்டுக்கல், கோவை, திருப்பூர், கரூர், தேனி மாவட்டங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 137.95 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தவிர 8.52 லட்சம் சதுர அடி மனைகள் மற்றும் 86 ஆயிரத்து 943 சதுர அடி கட்டிடங்கள் ஆகியவை 467 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.1,316 கோடி ஆகும் என பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
