×

டியூட் படத்தில் இளையராஜா பாடல் சமரசம் ஏற்பட்டதால் வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ ஆகிய பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியில்லாமல் இளையராஜாவின் பாடல்களை டியூட் படத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. பாடலை பயன்படுத்தியதற்காக படத்தில் நன்றி தெரிவிக்கப்படும். சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞரும் சம்மதம் தெரிவித்தார். இதைடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Ilayaraja ,Diwali ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்