- கேரள காங்கிரஸ் சட்டமன்ற
- திருவனந்தபுரம்
- ராகுல் மங்குட்டமால்
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- பாலக்காடு தொகுதி
- கேரளா
- எம்எல்ஏ...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து அவரை கருச்சிதைவு செய்ய மிரட்டியதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து ராகுல் மாங்கூட்டத்தில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி பாஜ உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.
இந்தநிலையில் கடந்த மாதம் 27ம் தேதி இளம்பெண் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக புகார் கொடுத்தார். இதையடுத்து திருவனந்தபுரம் வலியமலை போலீசார் அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்தில் தலைமறைவானார். ஒரு நடிகைக்கு சொந்தமான சிவப்பு காரில் அவர் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர். போலீசார் கோவை, பொள்ளாச்சி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வருகின்றனர். மேலும் ஒரு பலாத்கார புகார்: ராகுல் மாங்கூட்டத்தில் திருமணம் செய்வதாக கூறி தன்னை பலாத்காரம் செய்தாக பெங்களூருவில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த 23 வயதான இந்த இளம்பெண் கேரள மாநில காங்கிரஸ் தலைவர், சோனியா காந்திக்கு நேற்று புகார் செய்துள்ளார்.
