×

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி எதிர்த்து மேல்முறையீடு

மதுரை: மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

Tags : Thiruparankundram hill ,Madurai ,Judge ,G.R. Swaminathan ,Rama Ravikumar ,Egumalai, Madurai district ,Court ,Karthigai ,
× RELATED ஆதரவற்றோர்களுக்காக தங்கும் இடத்தை...