டெல்லி : “Sanchar Saathi செயலி போன்களில் இடம்பெற்றால், அதை நீக்க பயனர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும்!” என்று ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, Sanchar Saathi செயலியை பயனர்கள் விரும்பினால் போனில் இருந்து Uninstall செய்துக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தொலைந்துபோன அல்லது திருடுபோன போன்களை கண்டுபிடிப்பது, ஐஎம்இஐ மோசடியை தடுப்பது உள்ளிட்டவைகளுக்கு உதவும் சைபர் செக்யூரிட்டி செயலியான ‘Sanchar Saathi’ போன்களில் இடம்பெற்றால், அதை நீக்க பயனர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
